Friday, June 3, 2011

ஈழம் அழிய வைகோ செய்த தவறுகள்

ஆம். இந்த தலைப்பு வைப்பதால், இக்கட்டுரையோ அல்லது தமிழ் லீடர் இணையத்தளத்தாலோ பரபரப்பு ஏற்பட வேண்டும் என்பதல்ல நோக்கம். இது விவாதமாக வைக்கப்படும் கட்டுரை. இக்கட்டுரையின் முடிவில் உங்களுக்கு தலைப்பின் மீது தாக்கம் ஏற்படுவது நிச்சயம் என்பதே அந்த விவாதம்.


 
வைகோ.

யார் இவர்?

1944ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மே மாதம் 22ம் தேதி பிறந்தவர் வை.கோபால்சாமி.

பள்ளிப்படிப்பில் எட்டு வயது முதல் கல்லூரி படிப்பு வரை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டவர்களில் இவரே முதல் பரிசுக்குச் சொந்தக்காரர்.

பேச்சுப் போட்டி மட்டுமா, வாலிபால் விளையாட்டு வீரர்.

தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்.

உலக வரலாறுகளை மடை திறந்த ஆறாய் ஓடும்.

1965ம் ஆண்டு, சென்னை போலீஸார் நடத்திய கட்டுரைப்போட்டியில், மாநிலக் கல்லூரி மாணவரான கோபால்சாமிக்கே முதல் பரிசு.

1969ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சிறந்த பேச்சாளர் விருது வாங்கியவர்.

தி.மு.க.வில் மாணவர் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர்.

மேடையில் ஏறினால், எந்த குறிப்புகளையும் பார்க்காமல் மணிக்கணக்கில், கேட்பர்களின் மனம் ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய பேச்சாளர்.

1971-77 வரை குருவிக்குளம் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்.

1977ல் மிசா கைதி.

1977-79 நெல்லை-குமரி மாவட்ட தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்.

மூன்று முறை மாநிலங்களவை எம்.பி.

இரண்டு முறை மக்களவை எம்.பி.

30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

தி.மு.க.வின் போர்வாள் என்று கலைஞரின்  வர்ணனைக்குள்ளானவர்.

தி.மு.க.வின் மேடை பேச்சாளர்களில், 1980 முதல் தி.மு.க.வில் அதிகம் ஈர்க்கப்பட்டவர் வை.கோபால்சாமி.

தி.மு.க..வில் வைகோவின் வளர்ச்சி என்பது செயற்கையானது அல்ல. அவரது வளர்ச்சி என்பது திட்டமிடாத ஓர் வளர்ச்சி. கலைஞரின் அன்புக்கு பாத்திரமானத்தால், அக்கட்சியில் அவருக்கு எல்லாம் சாத்தியமாகியது.

1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு. வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்.

ஈழத்திலிருந்து வந்ததும், கலைஞர் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு கலைஞருக்கும் வைகோவுக்கும் சில மனக்கசப்புகள் வளர்ந்துக் கொண்டே இருந்தன. அந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் காட்டு தர்பார் போல ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடியது. அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க.வில் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு பொதுக்கூட்டங்கள் நடந்தன. பல மேடைகளில் வைகோவின் குரல் ஒலித்தது.

தி.மு.க.வில் வைகோவின் இமேஜ் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் வைகோவை தி.மு.க.வின் போர்வாள் என்று வர்ணிக்கத் தொடங்கினார் கலைஞர். நிலைமை இப்படி இருக்க, கலைஞரின் மனசாட்சி(?) என்று தி.மு.க.வினர் பின்னாளில் புளங்காகிதம் அடைந்த முரசொலி மாறன், வைகோவை ஓரம்கட்டும்படி மாமாவிடம் புகார் வாசிக்கிறார்.

காரணம், டெல்லியில் முரசொலி மாறனைவிட வைகோவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது. இந்த காரணத்தை மாமா ஏற்றுக் கொள்வாரோ இல்லையோ என்று நினைத்து, இரண்டாவதாக, கட்சியில் ஸ்டாலினை வாரிசாக கொண்டு வரும் வேளையில் வைகோவுக்கு அபரிதமான வளர்ச்சியும் செல்வாக்கும் இருப்பது நல்லதில்லை என்று சொல்கிறார் மாறன்.

குடும்பத்திற்காக அன்று முதல் பலி கொடுக்கப்பட்டவர் தான் வைகோ. திட்டமிட்டு, அவரை கட்சி ஒதுக்குகிறது. அவரை யாரும் மேடைகளில் பேச அழைக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவுகள். இது கட்சியினருக்கு அரசல் புரசலாக தெரிய, கட்சியின் ஒரு சாரார் வைகோவை ஆதரிக்க முற்படுகின்றனர்.

இந்த ஆதரவுக் கூட்டத்தில் முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன். அவர் கலைஞர் கருணாநிதியை தாக்கி, ‘கருவின் குற்றம்’ என்று  எழுதிய கவிதை, தினகரன் நாளிதழில் வெளியானது. இதற்கு மறுப்புக் கவிதை எழுதி, அதே நாளிதழில் வெளியிடச் செய்தார் கருணாநிதி. அதை எழுதிய கவிஞர், அன்றைய செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஆறுமுகம்.

கருணாநிதிக்காக, மறுப்புக் கவிதை எழுதும் அளவுக்கு மதுராந்தகம் ஆறுமுகத்துக்கு ஆற்றல் இருந்திருந்தால், அவர் எப்படி வைகோவின் ம.தி.மு.க.வுக்கு வந்தார் என்பதுதான் கேள்வி.

கடைசியில், எல்லாம் வைகோவின் தூண்டுதல் காரணமாக இந்த கலகங்கள் நடப்பதாக கலைஞர் அறிவித்தார். அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.

என்னடா இது. வெளியே போ என்றால், போகாமல் இங்கேயே இருக்கிறானே என்று நினைத்த கருணாநிதி. தனக்கு எதிராக கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரையே, ஒரு கணக்காக அனுப்பி வைத்தவர்தானே கருணாநிதி.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்று எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்.

வைகோ போர்வாள் ஆயிற்றே! அவரை எப்படி வெளியே அனுப்பலாம் என்று சிந்தித்த போதுதான், அவருக்கு மத்திய உளவுத்துறையிலிருந்து மர்மமான கடிதம் வந்தது. அது மத்திய உளவுத்துறை அனுப்பிய கடிதம்தானா என்று இன்றளவும் சந்தேகம் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மூலம் என்னை வைகோ கொலை செய்ய திட்டமிட்டதாக டெல்லியிலிருந்து உளவுத்துறை தனக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஓர் அறிக்கை வெளியிட்டார் கலைஞர்.

இது கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சதி? என்றார் வைகோ.

வைகோ உடனே வெளியேறினாரா? இல்லை, ‘நாங்கள்தான் உண்மையான தி.மு.க. எங்களுக்குத்தான் அறிவாலயம் சொந்தம்’ என்று முழக்கமிட்டார். காரணம், அவருக்கு தி.மு.க.வில் இருந்து கிடைத்த உச்சப்பட்ட ஆதரவு. 30 மாவட்டச் செயலாளர்களில் கிட்டத்தட்ட 12 பேர் பகிரங்க ஆதரவு கொடுத்தார்கள். அன்றைய பொருளாளர் சாதிக்பாட்சா, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் மறைமுகமாக வைகோவை ஆதரித்தார்கள்.

அதுமட்டுமா, வைகோ என்ற நபருக்கு ஒரு நாளிதழே களத்தில் இறங்கியது. அது அன்றைய கே.பி.கந்தசாமி நடத்திய ‘தினகரன்’ நாளிதழ்தான். தி.மு.க.வை கைப்பற்ற முயற்சித்தார். கடைசியில், அம்முயற்சி பலனளிக்காமல் போனதால், ம.தி.மு.க. உருவானது.

அதுவும் நள்ளிரவில் சுடுகாட்டில். காரணம், வைகோ நீக்கியதை கண்டித்து பத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்களில் ஒருவரது சவ ஊர்வலம் முடிந்த பின்னர், அதே சுடுகாட்டில் சூளூரைத்தார் வைகோ.

அங்கே மலர்ந்ததுதான் மறுமலர்ச்சி தி.மு.க. 1994ம் ஆண்டு தோன்றிய ம.தி.மு.க.வில் இந்த நாள் வரை மறுமலர்ச்சி ஏற்பட்டதா என்றால்?... வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் அனைவருமே அதற்கு பதில் சொல்வதைவிட மெளனம்தான் சாதிக்க முடியும்.

கட்சியில் தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் மட்டுமில்லை. பல கட்சிகளில் இருந்து இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ஓட்டமெடுத்தார்கள் வைகோவை நோக்கி. இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத இடத்தில், வைகோ மட்டுமே இருப்பார். எதிர்கால முதல்வர் இவர்தான். கலைஞருக்கு பிறகு தி.மு.க.வே அவரிடம்தான் போய்விடும்… இப்படி எத்தனையோ பேச்சுக்கள். அத்தனையும் இன்றளவிலும் பேச்சு பேச்சாகவே இருக்கிறது என்பதுதான் வேதனை.

ம.தி.மு.க. தொடங்கியதும் முதல் கூட்டம் சென்னை ராயபுரத்தில், தி.மு.க.வை தோற்றுவித்து அண்ணா பேசிய இடம். ராயபுரம் சுழல்மெத்தை.

முதல் கோஷம் “பொதுவாழ்வில் தூய்மை... அரசியலில் நேர்மை… லட்சியத்தில் உறுதி”.
இந்தக் கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கி, மறுநாள் விடிய விடிய நடந்து, அதிகாலை 4.45 மணிக்கு முடிந்தது.

அன்று மேடை ஏறிய வைகோவின் எழுச்சி மிக்க குரலை கேட்டதைவிட, அவரது அழுகுரல்தான் அதிகம் பேசப்பட்டது. அவரது கண்களில் வழிந்த நீர், மேடையில் வீற்றிருந்தவர்களின் விழிகளில் ஓடிய நீர், கூட்டத்தை கேட்க வந்தவர்கள் வடித்த நீர் என, ம.தி.மு.க. ஓர் கண்ணீர் மேடையாகவே ஆகியது.

கட்சித் தொடங்கி, இரண்டு வருடங்கள் எந்த மேடையாக இருந்தாலு, வைகோ அதை கண்ணீரால் நனைத்துவிடுவார். கட்சித்தலைவன் ஒரு நாள் அழலாம். ஏதாவது முக்கியமான கட்டத்தில் கண் ஓரம் ஈரம் அரும்பும். இதுதான் தலைவன்களிடம் மக்கள் பார்த்தது. ஆனால், அழுது அழுது பேசி, இன்னமும் வைகோ அழுதுக் கொண்டுதான் இருக்கிறார்.

அவர் பேசும் போது ஏதாவது விசேஷம் இருக்கும்!

அவர் கோபம் காட்டினால், அதில் ஓர் அர்த்தம் இருக்கும்!

அவர் அழுததால், கண்ணீர் ஓடியதை தவிர ஒரு பலனையும் அவரும் காணவில்லை. கட்சிக்காரனும் பலன் அடையவில்லை!

கட்சி ஆரம்பித்து, ஒரு வருடத்திற்குள் நடைப்பயணம் தொடங்கினார். அதுவும் யாரை எதிர்த்து தெரியுமா?

அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து. ஜெயலலிதா தலைமையிலான அராஜக ஆட்சியை தூக்கியெறிவேன் என்று கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் அது மிகப்பெரிய ஊர்வலமாக வந்து, கடற்கரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்திக் காண்பித்தார். உண்மையிலேயே அது கின்னஸ் சாதனையாகவும் இருக்கலாம்.

கிட்டத்தட்ட 13 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுப்படான ஊர்வலம் சென்னையில் நடந்தது.

தி.மு.க. ஆடிப்போனது. வைகோவுக்கு இத்தனை கூட்டமா? என்று வாய்ப்பிளந்தது பத்திரிகைகள்.

1996ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு, ம.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1998ம் ஆண்டு யாரை கடுமையாக எதிர்த்தாரோ, அந்த அம்மையார் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தார்.

1999ம் ஆண்டு, மக்களவைக்கு மீண்டும் தேர்தல் வந்தது. இம்முறை யார் இவரை கழுத்தை பிடித்து பிடரியில் அடித்து அனுப்பினார்களோ அதே தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். கேட்டால், தான் ஏற்கனவே பா.ஜ.வுடன் கூட்டணி வைத்திருந்தேன். அக்கூட்டணியில் தி.மு.க.தான் வந்து சேர்ந்துவிட்டது என்பார் வைகோ.

அக்கூட்டணியில் இருந்த வைகோ, தி.மு.க.வுக்கும் சேர்த்துதான் பிரசாரம் செய்தார். எப்படி அவரால் முடிந்தது?

தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றியதால், பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள். அந்த தீக்குளிப்புக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று வைகோவிடம் கேட்டால், என்ன பதில் என்பதல்ல முக்கியம்.

அரசியல். அதுவும் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால், சுயமரியாதைக்கெல்லாம் அர்த்தம் தெரிந்திருந்தாலும் தெரியாமல் இருத்தல் நலம். அப்போது வைகோவுக்கு எது நலம் என்பது தெரிந்திருந்தது.

அங்கே சுயமரியாதை சிந்தனைக்கு இடம் அளித்தாரா வைகோ. அதைவிட சுயமரியாதையோடு(!) தி.மு.க.வை பாராட்டிப் பேசினார் வைகோ. தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று மேடைக்கு மேடை ,முழங்கினார் வைகோ.

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து பா.ஜ. கூட்டணி அரசிலும் ம.தி.மு.க. பங்கேற்றது. அடுத்து, 2001ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. இங்கே இருந்துதான், அரசியலில் அவர் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார் என்பதை வாசகர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டும். அதாவது தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் முறித்துக் கொண்டு வெளியேறியது. அதுவும் தனித்துப்போட்டி. ஒரு இடம் கூட வெற்றிப் பெற முடியவில்லை.

சரி. இருக்கவே இருக்கிறது. விடுதலைப் புலிகளை வைத்து மீண்டும் அரசியல் செய்யத்தொடங்கினார். புலிகளை ஆதரித்துப் பேசியதால், வைகோவை வேலூர் சிறையில் அடைத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இது நடந்தது 2002ம் ஆண்டு.

புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ, தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தப் போது, அவரை தமிழக அரசு, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சென்னை விமான நிலையத்தில் அவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிய போது, “பாசிச ஜெயலலிதா அரசை மக்கள் சக்தியைக் கொண்டு தூக்கியெறியும் வரையில் ஓயமாட்டான் இந்த வைகோ” என்ற குரல் ம.தி.மு.க.காரனின் காதில் மட்டுமின்றி, அனைத்து பத்திரிகையாளன் காதிலும் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, சிறையில் இருப்பேனே தவிர, ஜாமீன் கேட்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தார்.

ஒரு நாளா..

இரண்டு நாளா…

ஒரு மாதமா…

இரண்டு மாதமா…

19 மாதங்கள், அதாவது 577 நாட்கள் சிறையில்  இருந்தபடியே கட்சியை நடத்திய பெருமை உலக அரசியல் வரலாற்றில் வேறு எந்தத் தலைவனுக்கு கிடையாது.

திராவிட கட்சிகளில் தலைவர்களாக இருந்தவரில், அதிக நாள் சிறை தண்டனை பெற்றவர் என்ற பெருமை வைகோவைத் தவிர வேற யாருக்கும் கிடையாது. கிடைக்காது.

வேலூர் சிறையில் இருந்த அவரை, மீட்க கையெழுத்து இயக்கம் நடந்தது. அதில் முதல் கையெழுத்துப் போட்டவர் மாஜி தலைவர் கலைஞர் கருணாநிதி.

வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றித் திரிந்தார்.

40க்கு 40 அடிதத்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி. ஆனாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சிக்கு ரொம்பவே ஆடியது காங்கிரஸ். கூட்டணி கட்சிகள் கேட்ட துறைகள் எல்லாம் கிடைத்தன.

வைகோ என்ன செய்தார்?

மத்திய அமைச்சரவையில் பதவியேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

ஏன்? எதற்கு என்ற விளக்கம் அளிக்கவேயில்லை.

நான்கு எம்.பி.க்கள் பெற்றிருந்தும், ம.தி.மு.க.வுக்கு பல அழைப்புகள் வந்தும் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றார் வைகோ.

அமைச்சரவையில் பங்கேற்க, வெளியிலிருந்து ஆதரவு…

நாங்கள் கூட்டணியில் பங்கேற்கப் போவதில்லை என்று கூச்சல் கேட்ட நேரத்தில்…

வைகோ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரே?

அரசியலில் இப்படி ஒரு பண்பாளரா…

இத்தனை துணிச்சல் ஒரு அரசியல் தலைவருக்கு வருமா? என்று தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவே தன்னை பாராட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அதில் இருந்தது.
ஆனால், கட்சி?

இவரை நம்பி நாயாய் பேயாய் செருப்பு கூட இல்லாமல் கட்சிக்கு உழைத்தவன் கதியை எண்ணிப்பார்த்தாரா?

அதற்காக, அமைச்சரவையில் சேர்ந்து ஊழல் செய்ய வேண்டி சொல்லவில்லை. மத்தியில் ஒரு அமைச்சர் இருந்தால், தன்னால் கட்சி வளருமே! கட்சிக்காரனுக்கு நாலு காண்ட்ராக்ட் கிடைக்குமே?

சரி. போகட்டும். வைகோவையே இந்த வையகமே பாராட்டடும். நாமும் பாராட்டுவோம்.

தி.மு.க.வில் இருந்துக் கொண்டே இருந்தார். கலைஞரை மேடை தோறும் பாராட்டினார்.

என்ன நடந்தது 2006ம் ஆண்டு.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு!

வைகோவை சிறையிலிருந்து மீட்டு வந்த தி.மு.க.வில் அவர் இருந்தாரா? அங்கிருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்.

தி.மு.க.வில் அவருக்கு 21 தொகுதிகள் தர, இவர் 23 கேட்க, அங்கே இருந்தால்தானே தருவதற்கு?

வெளியேறினார். அ.தி.மு.க.வில் 35 தொதிகளை வாங்கிக்கொண்டு, சிறையில் போட்ட ஜெயலலிதாவை சிரித்துக் கொண்டே கும்பிட்டார்.

“என்னை கட்சியில் வைத்துக் கொண்டே, ம.தி.மு.க.வை அழிக்க முற்பட்டார் கருணாநிதி” என்று குற்றஞ்சாட்டினார்.

ஆனால் கட்சியினரும் நெருங்கிய பத்திரிகையாளர்களும் வைகோவிடம் கடுமையாக விவாதம் செய்தனர்.

அவர்களுக்கு வைகோ தந்த பதில்: ”ஸ்டாலினுக்கு என்னை கார் கதவை திறக்கச் சொல்கிறீர்களா” என்றார பத்திரிகையாளர்களிடம்.

“கட்சியை எப்படியாவது அழித்துவிட்டு, என்னையும் நிர்கதியாக்கப் பார்க்கிறார்” என்றார் கட்சியினரிடம்.

சரி? தேர்தலில் ம.தி.மு.க. ஜெயித்தது ஆறு தொகுதிகள்.

அ.தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம்தேதி வரை அமைதியாகவே இருந்தார்.

இங்கேதான் தலைப்புக்காக நாம் சிலவற்றை சொல்ல வேண்டியிருக்கிறது. 2009ம் ஆண்டு ஈழத்தில் இறுதிக்கட்ட போரை ராஜபக்‌ஷே நடத்திக் கொண்டிருந்தார். அந்த போருக்கு உறுதுணையாக இருந்தார் சோனியா காந்தி. அதாவது அந்த போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது மத்திய அரசு.

மத்திய அரசை ஈழத்தமிழர்களுக்காக, எதிர்க்க வேண்டிய கருணாநிதி, பாதுகாத்தார். பாதுகாத்தார் என்று சொல்வதைவிட, மத்திய அரசை எதிர்த்துப் பேசியவர்களையும் சிறையில் தள்ளும் அளவுக்கு கருணாநிதி துணிந்துவிட்டார்.

கருணாநிதிக்கு எப்படி இப்படி துணிச்சல். அதுவும் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து போராடுவதற்கு கூட அனுமதி கொடுக்க முடியாத அளவுக்கு கருணாநிதிக்கு என்ன மன அழுத்தம்.

காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?

ஒரே ஒரு காரணம்.

தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.

ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்.

இதெல்லாம் நடக்குமா? என்று நீங்கள் கேட்கலாம்.


ஆம். அதற்கு தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்திருக்க வேண்டும். அதற்கு தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு ம.தி.மு.க.வும் இருந்திருக்க வேண்டும். அப்படி ம.தி.மு.க. அக்கூட்டணியில் நீடித்திருந்தால், தி.மு.க. நிச்சயம் அத்தேர்தலில் 118 தொதிகளில் வென்றிருக்கும். ம.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் குறைந்தது 15 தொகுதிகளில் வென்றிருக்கும்.

தி.மு.க. மெஜாரிட்டியாக ஆட்சியில் அமர்ந்திருக்குமானால், அதே கூட்டணியில் ம.தி.மு.க. இருந்திருந்தால், காங்கிரஸை நெருக்கடி கொடுத்திருக்க முடியுமா… முடியாதா?

ஈழத்தமிழர்களுக்கு இத்தனை நெருக்கடி சூழ்ந்திருந்த வேளையில் கூட்டணியில் இருந்து கொண்டே, கருணாநிதிக்கு வைகோ நெருக்கடி கொடுத்திருக்க முடியும். அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், வைகோயின் தொடர் நெருக்கடிக்கு வளைந்து கொடுத்திருக்க மாட்டாரா கருணாநிதி?

அப்படியும் ஈழத் தமிழர்களுக்காக, இலங்கையில் அப்பாவி மக்கள் மீது நடத்தும் போரை நிறுத்தச் சொல்லி நிச்சயம் கருணாநிதி முழக்கமிட்டிருப்பார். அவருடன் வைகோ இருந்திருந்தால். வைகோ மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணிக்கு ஈழத்தமிழர்களுக்காக திருமாவளவனும் நெருக்கடி கொடுத்திருப்பார். இவர்கள் இருவரும் நெருக்கடி கொடுக்கும் போது, எந்தக் கூட்டணியில் அவர் இருந்திருந்தாலும் டாக்டர் ராமதாஸூம் கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்திருப்பார்கள்.

அல்லது வைகோ, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரை தன்வசமாக்கிக் கொள்ள கருணாநிதியே, அவர்களுக்கு ஏதாவது வரலாற்றில் பெயர் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி, களத்தில் குதித்திருக்கலாம்.

இச்சூழ்நிலையில், இலங்கைக்கு தானாகவே நெருக்கடி ஏற்பட்டிருக்குமா இல்லையா என்று சொல்லுங்கள்.

வைகோ நெருக்கடி கொடுத்தும், மெஜாரிட்டி இருந்தும் கருணாநிதி செவிமடுக்காமல் போயிருந்தால்… என்று சிலர் சொல்வது எப்படி அனுமானமாக இருக்குமோ அதைத்தான், வைகோ தி.மு.க. கூட்டணியில் நீடித்திருந்தால்…

இலங்கையில் இறுதிப் போர் நடந்திருக்காது.

பிரபாகரன் செத்திருக்கமாட்டான்.

மூன்று லட்சம் மக்கள் செத்திருக்கமாட்டார்கள் என்று தமிழ் லீடர் இணைய தளமும் அடித்து சொல்கிறது.

வைகோவால், ஈழத் தமிழர்களின் நலன் அழிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு, எதிர் வாதம் இருந்தால் தமிழ் லீடருக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயம் பதிவு செய்யப்படும்.


முடிவரைக்கு முன்பாக,

வைகோவின் தாரக மந்திரங்கள்

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, லட்சியத்தில் உறுதி.

இதுவரை வைகோவின் செயல்பாடுகளை பார்த்தால் அரசியலில் நேர்மையும் இல்லை. லட்சியத்தில் உறுதியும் இல்லை. பொதுவாழ்வில் தூய்மை அவரிடத்தில் உண்டு என்றாலும், நாட்டில் 60 முதல் 70 சதவிகித மக்களிடம் தூய்மை இருக்கிறது. அந்த மக்கள் தொகையில் அவரும் ஒருவராக இருப்பதில் தவறில்லை.

ஆனால், கட்சித் தலைவர் என்னும் போது...

அதுவும், அரசியல்... தேர்தலை சந்திக்கும் அரசியல் என்றால் அக்கட்சித்தலைவர் எடுக்கும் முடிவுகள் குறைந்தப்பட்சம் கட்சியை காப்பாற்ற வேண்டமா?

அரசியல் என்றால் போராட்டங்கள், தழும்புகள், தோல்விகள், வருத்தங்கள், வேதனைகள், அழுகை, தனிமை இவற்றுடன் சில மகிழ்ச்சியும் இருத்தல் அவசியமாகிறது.

அந்த மகிழ்ச்சி வைகோவுக்கு கிடைத்திருக்கிறதா? அவரே அவரது நெஞ்சில் கை வைத்து சொல்லட்டம்!

ஒரு மனிதன் வாழ்க்கையில் போராடலாம். ஆனால், போரட்டமே வாழ்க்கை என்றால், அது சாதனையா வேதனையா?

அர்சியலில் எப்போதுமே, தவறான முடிவு எடுப்பவர் வைகோ, சொந்தக் கட்சிக்கே சூனியம் வைத்துக் கொண்டவர் வைகோ என்று அக்கட்சியினரால் பேசுவது அவரது காதுக்கும் கேட்டிருக்கும்.

நல்ல பேச்சாளர்...

நல்ல பண்பாளர்...

நல்ல மனிதர்....

ஆனால், நாட்டில் நல்ல தலைவராக அவரால் வரமுடியவில்லையே!



முடிவுரை:

ஒருவேளை, 2006ம் ஆண்டிலிருந்து தி.மு.க. கூட்டணியில் வைகோ நீடித்திருந்து, ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசும் ஆளும் தி.மு.. அரசும் எதையும் செய்யவில்லை என்று 2009ம் ஆண்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி இருந்தால், அவரது பின்னால் வேறு கட்சிகளும் அணிவகுத்திருக்கும். ஏன், .தி.மு.. அணியில் பா... விடுதலைச் சிறுத்தை, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்திருக்கும். அந்த வைகோவை இன்று யாருமே வீழ்த்தி இருக்க முடியாது. 




சில விளக்கங்கள்:
இந்தப் பதிவை கண்ட வாசகர்கள் கடுமையான கண்டனத்தையும், அதே வேளையில் மிகுந்த பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள், திட்டுக்கள் இரண்டையுமே தமிழ் லீடர் சமமாகவே எடுத்துக் கொள்ளும். 
இது ஒரு விவாதம். வைகோ மீது பணம் வாங்கினார் என்று குற்றச்சாட்டு எழுப்பவில்லை. அரசியலில் மோசடி செய்தார் என்று எழுதவில்லை. அவர் எடுத்த முடிவின் காரணமாக இதெல்லாம் நடந்திருக்கிறது என்பதைத்தான் இந்தப் பதிவு சொல்கிறது.
அவர் ஈழ விடுதலையில் காட்டிய உறுதி என்றுமே மறுக்க முடியாது. மறைக்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மீது காட்டும் அதே பாசமும் நேசமும், ஈழத்தமிழர்கள் மீதும், இந்திய மக்கள் மீதும் அவர் வைத்திருக்கிறார் என்பதும் மறுப்பதிற்கில்லை.
காரணம், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அங்கேயும் இங்கேயும் ஓடியாடிக் கொண்டிருந்த நேரம். அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. நீடிக்குமா நீடிக்காதா என்ற விவாதம், அதாவது தனது கட்சிக்கு இத்தேர்தலில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் எழுந்த நிலையில், ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு, அணு உலை வெடித்துவிட்டது.
அந்த நேரத்தில் வைகோவிடம் இருந்து ஓர் அறிக்கை.
கல்பாக்கத்தில் இருக்கும் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஓர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
எந்தச் சூழ்நிலையிலும் அவர் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நேசித்தார் என்ற போது மெய் சிலிர்க்கிறது.
அதே வேளையில், ஐந்தாண்டு காலமாக ‘குடும்ப ஆதிக்கமா…. இல்லை தமிழ்நாட்டின் ஜனநாயகமா… நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்’ என்று முழக்கமிட்ட வைகோ ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பதுதான் ம.தி.மு.க.வினரின் மனதில் எழுந்த வேதனை.
2006 தி.மு.க. கூட்டணியில் அவர் நீடித்திருந்தால் என்ற அடிப்படையில் தான் இந்த கருத்து ஓர் விவாதமாக, கட்டுரையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காரணம், உலகத்தில் எது நடந்தாலும் குறிப்பாக தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்துவிட்டால், அது தன்னால்தான் நடந்தது என்று அறிவித்து மகிழ்ந்துக் கொள்ளும் அளவுக்கு மனம்(!) படைத்தவர்தான் கருணாநிதி.
அப்படிப்பட்டவருடன் கூட்டணியில் இருந்து கொண்டு, ஈழத்தமிழர்களின் போரை நிறுத்த வேண்டும் என்று வைகோ தனியாக புறப்பட்டிருந்தால், அவருக்கும் பேரும் புகழும் கிடைத்துவிடும் என்று அஞ்சி, கருணாநிதியும் வைகோவின் இழுத்த இடத்துக்கு வந்து, காங்கிரஸை எதிர்த்து இருப்பார் என்பதுதான் இக்கட்டுரையின் மையக் கருத்து.

Sunday, January 30, 2011

ஈழத்தின் தெருக்களில் நடப்பது தமிழக கரையோரங்களில் தொடர்கின்றது…! தமிழர்களே விழித்தெழுவோம்!!

சிறிலங்காவை மாறி மாறி ஆண்டுவரும் சிங்கள பேரினவாத அரசுகளின் பூரண ஒத்தாசையுடன் ஈழத்தின் தெருக்களில் நடைபெற்றுவரும் காணாமல்போதல் கடத்தல் சித்திரவதைக்குள்ளாதல் சுட்டுக்கொல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் எல்லை கடந்து தற்போது தமிழக கரையோரங்கள்வரை நீட்சிபெற்றிருப்பது திட்டமிட்ட இனஅழிப்பின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும்.


1956ம் ஆண்டு சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற பிரதான நோக்கத்தோடு பண்டாரநாயக்காவால் வாக்குறுதியாக அறிவிக்ப்பட்ட சிறிலங்கா முழுமைக்கும் தனிச் சிங்களச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழர்கள் வகைதொகையின்றி கொன்று அழிக்கப்பட்டு வருகின்றனர்.

கைதுகள், காணாமல் போதல், கடத்தப்பட்டு பின் காணாமல் போதல், சுட்டுப் படுகொலை செய்தல் என பல்வேறு வடிவமெடுத்த தமிழின அழிப்பு நடவடிக்கைகள் தற்போது உச்சம்பெற்று எல்லைகடந்து தமிழக கரையோரங்களையும் தொட்டுநிற்கின்றது.

கடந்த 24மணிநேரத்தில்… கடந்த 48மணிநேரத்தில்… கடந்த சில நாட்களில்… கடந்த ஒரு வாரத்தில்… கடந்த ஒரு மாதத்தில்… என காலநிர்ணயம் செய்து கடத்தல்கள், காணாமல் போதல், கொலைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் தினசரி பத்திரிகைகளில் தொலைக்காட்சி வானொலி செய்திகளில் வெளிவருவது ஈழத்தில் வாடிக்கையாகிப் போய்விட்ட நிலையில் பாக்குநீரினை பகுதியில் சிங்களத்தால் தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதனால் தமிழக கரையோரங்களிலும் இத்தகைய நிலை ஏற்பட்டுவருவது திட்டமிட்ட தமிழின அழிப்பேயாகும்.

கடந்த 10 நாட்களில் இரண்டாவது மீனவர் சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தமிழக ஊடகங்கள் செய்திவாசித்துவருகின்றன. தற்போது தமிழகம் சட்டமன்ற தேர்தலை எதிர்நேக்கியிருக்கும் நிலையில் தமிழக மீனவர்களது படுகொலையும் வேகம்பிடித்துள்ளமை பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

வட இந்தியர்கள் புலம்பெயர் தேசங்களில் இன்னல்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் வட இந்திய ஊடகங்கள் ஆர்பரித்து பரபரப்பு செய்திகளை வெளியிட்டுவந்த போதும் 537 தமிழக மீனவர்கள் (செல்லப்பன் வரை) இதுவரை சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித செய்திகளையும் வெளியிடாமல் மௌணமாக இருந்தே வந்துள்ளன.

இதைவிட கொடுமை என்னவென்றால் ஏனைய மாநிலத்தவர்கள் தமது இனத்தவர் மதத்தவர் மொழிபேசுபவர்கள் என்ற ஒற்றுமையில் கடல்கடந்து பிளைப்பிற்காகவும் மேற்படிப்பிற்காகவும் சென்ற தமது உறவுகள் பாதிக்கப்படும் போது கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி தேசிய சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்கும்வண்ணம் போராட்டங்களை நடத்துவதும் அதனை வட இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தி பரபரப்பை பற்றவைப்பதுமாக தமது இன மத மொழி உணர்வை வெளிக்காட்டிவரும் நிலையில் தாய்த் தமிழக ஊடகங்களும் அவற்றை விஞ்சும் வகையில் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுவருவதுதான்.

ஆனால் திடீர் அக்கறையாக 538வது மீனவனாக சுட்டுக்கொல்லப்பட்ட போது இந்திய வரலாற்றில் முதல்முறையாக பாண்டியனிற்கு “இந்திய மீனவன்” என்ற கௌரவ நிலையினை வட இந்திய ஊடகங்கள் வழங்கியிருந்த அதிசயத்தை என்னவென்று சொல்லுவது.

வடஇந்திய ஊடகங்கள் எட்டடி பாய்ந்தால் சோனியாகாந்தியின் தலைமையில் செயற்பட்டுவரும் இந்திய நடுவன் அரசு பதினாறடி பாய்ந்து இந்திய-சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டதுடன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. (சம்பவம் தொடர்பாக விளக்கம் என்றால் : எப்படி சுட்டது..? சுடும் போது தமிழன் கதறித் துடித்தானா..? கெஞ்சிமன்றாடினானா..? அழுது புலம்பினானா..? கழுத்தில் கயிறு கட்டி இழுத்து கொல்லும் போது துடிதுடித்து செத்துப்போன எங்கள் உறவு செயக்குமாரின் இறுதி நிமிடங்கள் பற்றிய நேரடி வர்ணனையா..?) கண்டிப்பாக இதனைதானே சிறிலங்கா தூதரக அதிகாரிகள் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள். இவ்வாறு தமிழர்கள் உயிர்போகும் தறுவாயில் கதறித்துடித்ததைதானே சோனியா கும்பலும் கேட்டுரசிக்க துடிக்கின்றது. ஒருவேளை தேர்தல் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேரத்திற்காக டெல்லி பயணமாகும் கருணாநிதியும் இதனை கேட்டு மகிழமுடியும்.

எமது தொப்புள்கொடி உறவான பாண்டியனிற்கு இந்த அளப்பரிய கௌரவநிலை கிடைத்ததன் பின்னணி பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி நிற்கின்றது.


1-இதுவரை நட்பு நாடாக இருந்த சிறிலங்கா நாடு இப்போது வேண்டாத நாடாகிவிட்டதா…?

2-இதுவரை பக்கதுணையாக இருந்து தமிழின அழிப்பிற்கு உதவியதற்கான பிரதிபலனாக எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவிற்கு ராசபக்சே கைமாறு செய்யாததனால் ஏற்பட்ட கோபத்தாலா…?

3-ராசபக்சவுடன் சேர்ந்து தமிழர்களை ஈழத்தில் அழித்தொழித்த போது இரண்டு மணித்தியால உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியும்.. ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அகில உலகமட்டத்தில் பொய்த் தகவல்களை பரப்பியும்.. கொட்டும் மழைபெய்த போதும் அடுத்த தினத்திற்கு ஒத்திப் போட்டு மனிதசங்கிலிப் போராட்டம் நடத்தியும்.. ஒப்பிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தமிழக சிறுத்தை உள்ளடங்கலாக சிறிலங்கா அனுப்பி வைத்தது.. என பல்வேறு நிலைகளில் தனது டெல்லி(சொக்கத்தங்கம் சோனியா) விசுவாசத்தை காட்டி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருந்த கருணாநிதி இப்போது வேண்டாத ஆளாகிவிட்டாரா…?

4-உலகமகா ஊழலை தலைமையேற்று நடத்தி முடித்து இப்போது மாட்டிக்கொண்டு தி.மு.க. முளிப்பதோடு தம்மையும் சேர்த்து குற்றவாளிகளாக நடு வீதியில் இழுத்துவிட்ட ஆத்திரத்தால் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசிற்கு நெருக்கடியை கொடுத்து இந்தமுறை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவா..?

5-தமிழக மீனவர் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக்கி தி.மு.காவிற்கு நெருக்கடியை உண்டுபண்ணி வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் தொகுதிகளை பெறலாம் என்ற எண்ணத்திலா…?

இது போன்று பலவேறு சந்தேகங்கள் இதன் பின் ஒளிந்து கிடக்கின்ற நிலையில் இன்னும் தமிழகத்தை ஆளும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு எவ்வித உடனடி நடவடிக்கையும் எடுக்காது வெறுமனே கடிதம் அல்லது தந்தியை அனுப்புவதோடு இருந்துவிடுகின்றமை வேதனையாக இருக்கின்றது.

இதில் எது காரணமாக இருந்தாலும் ஈழமண் தமிழகமண் இரண்டிலும் வாழும் தமிழர்களது உயிர் இவர்களது மாநில தேசிய சர்வதேச அரசியல் நலனிற்காக பறிக்கப்பட்டு வருவது மாத்திரம் வேதனையுடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மையாகும்.

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் அதனை தடுத்துநிறுத்துவதற்கு உளப்பூர்வமாக தமிழக இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க நினைக்கவில்லை என்பதையே நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

உடனடியாக இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராசதந்திர தொடர்புகளை முறித்துக் கொண்டு இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடுவதுடன் சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதுவரை உடனடியாக திரும்ப அழைத்து இராசதந்திர நெருக்கடி கொடுப்பதுதான் தனது நாட்டுப் பிரஜைகள் மீது அக்கறைப்படும் அரசு எடுக்கும் உடனடி நடவடிக்கையாகும்.

இந்திய அரசு தமிழர்கள் என்று ஓரவஞ்சனை காட்டிசெயற்பட்டால் தமிழக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக அரசாவது மத்திய அரசிற்கு இராசதந்திர நெருக்கடிகளை கொடுப்பதற்கு மத்திய அரசிற்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக இந்திய அரசு ஒப்பிற்காக உதட்டளவில் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருப்பதும் எது எதுக்கோ டெல்லிக்கு சென்று முகாமிட்டு தங்கியிருந்து காரியம் சாதிக்கும் கருணாநிதி தமிழர்களது உயிர்பறிபோகும் அதிமுக்கிய விடயத்தில் தந்தியடித்துக் கொண்டும் கடிதம் எழுதிக் கொண்டும் அருகில் இருப்பவருக்கே கேட்காதவாறு முனகல் கண்டனங்களை வெளியிடுவதுமாக மத்திய மாநில அரசுகள் மெத்தனப் போக்கில் செயற்படுவதனாலே சிங்கள கடற்படை துணிச்சலாக தொடர்ந்து தமிழக மீனவ சொந்தங்களது உயிரை பறித்து வருகின்றது.

செயக்குமார் கழுத்தில் சுருக்கிட்டு சிங்கள கொலைவெறிப் படையால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் இந்தியாவின் தென் கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படைத்தளபதி கருணாநிதியுடனான சந்திப்பில் இனிமேல் தமிழக கடற்பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாது என உறுதிமொழி வழங்கியிருந்த நிலையிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்திய தென்கிழக்கு கடற்பிராந்திய தளபதியின் உறுதி மொழியும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சியின் கண்டனங்களும், இந்திய உள்துறை அமைச்சராக இருக்கும் வேட்டி கட்டிய தமிழரான சிதம்பரத்தின் எச்சரிக்கைகளும், தமிழக முதல்வர் கருணாநிதியின் தந்தியடிப்புகளும் கடிதத் தூதுகளும் தொடர் நிகழ்வுகளாக நடந்து கொண்டிருக்கும் போதே இன்னுமொரு தமிழக மீனவச் சகோதரன் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டிருப்பதானது மத்திய மாநில அரசுகளின் ஏனோதானோ என்ற வலுவற்ற எதிர்நடவடிக்கைகளை நிரூபித்து நிற்கின்றது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் இழப்பீட்டுத் தொகை 5இலட்சமாக அதிகரித்துள்ளதே தவிர சிங்களவர்களின் கொலைவெறியாட்டத்திற்கு உள்ளாகி பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் தமிழகத்து துயரமாக உள்ளது.

தமிழகத் தமிழர்களை ஆளும் கருணாநிதி கும்பலும் இந்தியாவை ஆளும் சோனியா கும்பலும் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தினம்தினம் மரணத்தோடு போராடி மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பும் எமது உறவுகளை பேராசைக்காரர்கள் என்று கூறிவருகையில் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

எமது மீனவச் சொந்தங்களை பேராசைக்கார் என்று கூறும் இவர்கள் பிளைப்பிற்காக எல்லைகள் கடந்து அரபு நாடுகளிலும் மேற்கத்தைய நாடுகளிலும் வாழ்ந்துவரும் தமிழரல்லாத இந்தியர்கள் தாக்கப்படும் போதோ அவமானப்படுத்தப்படும் போதோ அவர்கள் மீது ஏன் இந்த பேராசைக்காரர்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துவதில்லை.

அவர்கள் மாத்திரம் என்ன கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோபாலபுரத்திற்குள்ளேயே இருந்து உழகை;கவேண்டியது தானே? எதற்காக உலகம் முழுமைக்கும் தமது ஆதிக்க கரங்களை படரவிட்டு தொழில்வளத்தை விரிவுபடுத்துகிறீர்கள். அது பேராசை இல்லையா…? அந்த பேராசையின் வெளிப்பாடாக கிடைத்த தொகையினை எல்லைகள் கடந்து சுவிசு வைப்பகத்தில் மறைத்து வைத்துள்ளதை என்னவென்று சொல்வது..?
இவர்களை வென்ற சோனியா குடும்பம் அரசியல் முன்னோடியான காந்தியடிகளது வழியைப் பின்பற்றி றாட்டையில் நூல் நூற்று உழகை;கவேண்டியதுதானே? எதற்காக போபர்சு பீரங்கி முதல் தற்போது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல்வரை நேரடிபங்குதாரராக இருந்து கிடைத்த தொகையான பல்லாயிரம் கோடிகளை சுவிசு வைப்பகத்தில் மறைத்து வைத்தும் இலாபம் கொளிக்கும் முதலீடுகளாக பல்தேசிய தொழில் நிறுவனங்களில் வைத்துள்ளமையை பேராசை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

இருந்த இடத்தில் இருந்து ஆட்சி அதிகாரத்தினை பயன்படுத்தி திட்டங்களை அமுல்படுத்தி அதன் ஊடாக பல கோடிகளை பெற்றுவருபவர்களுக்கு அலைகடலுடன் போராடி தினமும் தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த போராடும் எமது மீனவச் சொந்தங்களது மரணப் போராட்டத்தின் வலி எப்படித் தெரியப்போகின்றது?

வெறுமனே எல்லைதாண்டி வருகிறார்கள் என்ற ஒற்றைக்காரணத்திற்காக எமது சொந்தங்கள் சிங்களத்தால் வேட்டையாடப்படவுமில்லை! இந்தியாவை ஆளும் சோனியா கும்பலால் கைகழுவிவிடப்படவுமில்லை! தமிழரல்லாத தமிழுணர்வு அற்றுப்போன தமிழர் நலனைவிட தனது குடும்பத்தின் சுகபோகமே மேலானது என நினைக்கும் கருணாநிதி மக்கள் வரிப்பணத்தில் இருந்து 5இலட்சம் தொகையினை கொடுப்பதோடு தனது கடமையை முடித்துக் கொள்ளவுமில்லை! சாவதும் அடிபடுவதும் மிதிபடுவதும் அவமாணப்படுவதும் தமிழன் என்பதாலேயே ஆகும்.

இந்திய உள்ளிட்ட இருபதிற்கு மேற்பட்ட நாடுகளது ஆதரவுடன் ஈழத்தில் தமிழர்களை அழித்தொழித்த சிங்கள அரசு தனது கொலைக்கரத்தை பாக்குநீரினை கடந்து தமிழக கரையோரங்கள்மீது படரவிடுவது அங்கு இருப்பவர்களும் தமிழர்கள் என்ற காரணத்தால்தான். மகிந்த ராசபக்சவின் தமிழின அழிப்பில் இருந்து இந்த கருணாநிதி வம்சம் தமிழரல்லாத காரணத்தால் தப்பிவிடும் சூழ்நிலை இருப்பதால்தான் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த தமிழினமும் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கருணாநிதி சோனியா ராசபக்சே கூட்டணி செயற்பாட்டில் இருந்து வருவதன் வெளிப்பாடுதான் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட பல்லாயிரம் ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 539வது தமிழக மீனவனாக செயக்குமார் சிங்கள கடற்படையால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளமை ஆகும்.

தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று சடலமாக சரித்துவிட்டு தமது வீரரர்கள் இதனை செய்யவில்லை என்று நா கூசாமல் மறுப்பறிக்கையினை சிங்கள அரசு வெளியிடுவதும் அதனை ஆமோதித்து இந்திய பிரதமர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் தமிழக தமிழர்களின் முதல்வரான கருணாநிதியும் தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு ஊனங்களும் அறிக்கைகள் வெளியிட்டு திசைதிருப்புவதும் வழக்கம் போல் நடைபெற்றுவருகின்றது.

அதனைவிட தமிழக மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருப்பதைக் காட்டிலும் இந்தியனாக இருப்பதையே விரும்புகின்றனர். செல்லப்பன்(537..), பாண்டியன்(538..), செயக்குமார்(539..?) ஆகிய சொந்தங்கள் குறுகிய நாட்களில் சிங்களத்தால் கொல்லப்பட்டிருக்கும் இவ்வேளையில் இந்திய குடியரசு தினமான சனவரி-26 அன்று இந்திய தேசியக் கொடியை தமது நெஞ்சின் மீது குத்திக்கொண்டு பாரத மாதாவுக் வெற்றிக் கோசங்களை எழுப்பி இந்தியனாக பூரித்து நிற்பது இதனையே நிரூபித்து நிற்கின்றது.

தமிழக தமிழர்களை இந்திய தேசம் என்றுமே இந்திய குடிமகன்களாக ஏற்றுக் கொண்டு செயற்பட்டது கிடையாது. அதனை பல்வேறு விடையங்களில் தமிழக சகோதரர்கள் உணர்ந்திருப்பினும் இன்னும் இந்தியனாக இருக்கவே ஆசைப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய குடிமகன் என்ற அடையாளம் தமிழர்களது உயிரை காப்பாற்ற உதவாதபோது எதற்காக அதனை கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்க வேண்டும்.

தமிழர்களை மாற்றாந் தாய் மனப்பாண்மையுடன் கையாளும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய அரசிற்கு தமிழர்களது எதிர்ப்பினை அடையாளப்படுத்துமுகமாக இனி கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழர்கள் தமது படகுகளில் இருக்கும் இந்திய தேசியக் கொடியை அகற்றிவிட்டு செல்லவேண்டும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சுயாட்சி கோரிக்கை விசுவரூபம் எடுத்து வருகையில் தமிழகத்தை ஆள்பவர்கள் தமது சுயலாபத்திற்காக இந்திய மத்திய அரசின் அடிமையாக இருந்து வருகையில் மானமுள்ள தமிழர்களாவது இந்திய அரசிற்கு எச்சரிக்கை விடும் வகையில் இந்திய தேசியக் கொடியை தூக்கியெறிய வேண்டும்.

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்! நாங்கள் மாத்திரம் தான் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் கட்சியின் பெயராலும் பிளவுபட்டு நாமே எமது அழிவிற்கான காரணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனையவர்கள் பிளவுபட்டிருந்தாலும் இனம் மொழி என்ற குடைக்குக்கீழ் அணிவகுத்து தம்மை நாடிவரும் அழிவுகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.

ஒரே ஒரு மலையாளி இந்திய மத்திய அரசில் இடம்பிடித்து இன்று சோனியாவின் சமையலறை முதல் இந்திய அமைச்சரவை வரை அங்கமாகி இந்திய மத்திய அரசையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு பலம்மிக்கவர்களாக உருவாகியுள்ளமை அவர்களது இன மொழி உணர்வினாலேயே சாத்தியமாயிற்று. இதே போன்றுதான் மராட்டியர்களும் தெலுங்கர்களும் தமது ஒன்றுபட்ட பலத்தால் உரிமைகளை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் தமிழர்களாக ஒன்றிணைவோம். தமிழர்கள் என்ற அடிப்படையில் அழிக்கப்படும் போது நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து எமது சுதந்திர வாழ்வை உறுதிசெய்வதில் என்ன தயக்கம் உள்ளது தமிழர்களே!? எமக்கான நாடாக தமிழீழத்தை மீட்டெடுத்து நிறைவான ஆட்சிதர தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் உள்ளார். நாம் சாதி,மத,கட்சி பேதங்களை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாக ஒரே குடையின்கீழ் ஒன்றிணைந்து பலம் மிக்கதொரு சக்தியாக உருவாகும் நாளில் நிட்சயமாக தலைவர் எம்மை வழிநடத்த விரைந்து வருவார்.

நாம் தமிழர்களாக ஒன்றிணைவதும் அதன் உடனடி பயணாக தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான இறுதிக்கட்ட போரிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வெளிப்பாடு அமைவதுமே இந்த இழிநிலைக்கு தீர்வாக அமையும்.

ஆகவே தமிழர்களே உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் துன்பப்படும் போது ஓடோடிவந்து துன்பம் நீக்கி நல்வாழ்வு தந்திட சுதந்திர தமிழீழ அரசு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையில் அமைவது அவசியமாகும்.

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(28-01-2011)

Wednesday, January 26, 2011

மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என்ன?

இந்திய கடற்படையோ அல்லது கடலோர ரோந்து படையினரோ, ஏன் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒட்டுமொத்த பிரச்னையின் மையமாக இருக்கும் சர்ச்சைக்குரிய, இந்திய – இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், 2008ல் போடப்பட்ட ஒப்பந்தமே காரணம் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாதவரை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும்.


மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. படகுகளை பிடுங்குவது, அவற்றை உடைப்பது, வலைகளை அறுப்பது, மீனவர்களை தாக்குவது போன்ற காரியங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
தொடர்ந்து மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கான காரணமும், அதை தடுத்து நிறுத்த முடியாத அவலத்துக்கும் காரணம் என்ன என்பது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மீனவர்களின் தாக்குதலுக்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது தான் என்றும், அதை திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. 1974ல், இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தம் அது.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்த ஒப்பந்தம் தான்.ராமநாதபுரம் மகாராஜாவுக்கு சொந்தமாக, இந்த கச்சத்தீவு இருந்ததற்கான அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இருக்கின்றன. தவிர, பூகோள அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத முக்கிய இடம் கச்சத்தீவு. இப்படியிருந்தும், கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது.
அந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்கு என, சில உரிமைகள் அளிக்கப்பட்டன. மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்துவதற்கு உரிமை அளிக்கப்பட்டது. இது தவிர, கச்சத்தீவு அந்தோணியார் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு சென்று வருவதற்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன. வலைகளை உலர்த்துவதற்கு உரிமை உள்ளது என்றாலே, அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கும் உரிமை உள்ளது என்பது தான் அர்த்தம்.
அந்த காலத்தில் நைலான் வலைகளை மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது மாறிவிட்டதால், வலைகளை உலர்த்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லாமல் போய் இருக்கலாம். அதுகூட, 34 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்து வந்தது. அவ்வப்போது சிறிய அளவில் பிரச்னைகள் வருமே தவிர, பெரிய அளவில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது.
இந்த சூழ்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி நடைபெற்ற 2008ல், திடீரென ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையில், இந்த ஒப்பந்தம் போடவில்லை. விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசு முனைப்பாக இருந்த சமயம் அது.
அப்போது இருநாட்டு அதிகாரிகள் கூடி ஆலோசித்து, அவர்கள் மட்டத்திலேயே போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. அந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கு இடையிலான சென்சிடிவ் பகுதிகள் எது எது என கண்டறிந்து, அப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என, இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்டது. அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு, இந்திய அதிகாரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர்.
அப்படி, இலங்கை அதிகாரிகள் கேட்ட கோரிக்கைகளுக்கு, இந்திய அரசு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் அது. அந்த ஒப்பந்தம் தான் இப்போதும் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தமிழக மீனவர்கள் மீறுகின்றனர் எனக் கூறி, இந்திய கடற்படையினரோ, கப்பல் ரோந்து படையினரோ பாதுகாப்பு தர முடியாத சூழ்நிலை உள்ளது.
நடைமுறையில் உள்ள உண்மை இது என்றாலும், இது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் உள்ளது. இரு நாட்டு அரசுகள் கூட போடாமல், வெறும் இரு தரப்பு அதிகாரிகளே போட்டுக் கொண்ட அந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, மீனவர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளோ, போராடும் பிற அமைப்புகளோ முன் வைப்பதில்லை.
இந்த ஒப்பந்தம் தான், தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு வழி வகுக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில், பல காரணங்களுக்காக போடப்பட்டது அந்த ஒப்பந்தம்.
ஆனால், இப்போது புலிகள் அமைப்பே இல்லை என்றாகிவிட்ட பிறகும், அந்த ஒப்பந்தம் ஏன் நீடிக்கிறது என்பது குறித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமாக எழாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

நன்றி: நெருடல்.

Monday, January 10, 2011

தமிழ் இனபோராளி போர்வையில் ஏமாற்றும் சீமான்

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்..,
முண்டாசு கவிஞன் பாரதியின் வரிகள் இன்றும் இந்த கேடு கெட்டவனை, " போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதாவின் கைக்கூலியை",
நினைத்து பாடப் பட்டதோ???

பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் தரவேண்டும்!,
பிரபாகரனை தூக்கிலிடவேண்டும்!,
விடுதலைபுலிகளை இந்தியாவில் தடை செய்யவேண்டும்! என சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் இயற்றியவர் தான் ஜெயலலிதா என்னும் அரசியல் வியாபாரி!
இலங்கையில் சந்திரிகா, ராஜபக்சே-வுடன் சேர்ந்து ஈழ  தமிழனின் நெஞ்சிலே அறிக்கைகளால் வேல் பாய்ச்சியவர் தான் இந்த ஜெயலலிதா!
அங்கே ராஜபக்சே-வின் விமானங்கள் குண்டு மழை பொழிந்த போது,
" போர் என்றால் குண்டு மழை பொழியத்தான் செய்யும், மக்கள் சாகத் தான் செய்வார்கள்!" என அறிக்கையால் ஈழக் தமிழனின் குருதி குடித்தவர் ஜெயலலிதா!
இங்கே கேடுகெட்ட சாத்தான் காங்கிரசின் ஆதரவுக்கு முயற்சித்து கிடைக்காத வேளையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக,
தமிழகத்து தமிழனை முட்டாளாக்க..,! வோட்டு வாங்க..,
ஈழத்தமிழனுக்கு ஆதரவு என்னும் நாடகத்தை வெறும் இருபது நாட்கள் மட்டுமே தேர்தல் மேடைகளில் நடித்த முன்னாள் நடிகை ஜெயலலிதா!
தேர்தலுக்கு பின் ஈழ தமிழன் இருக்கிறானா??? செத்தானா? என்று வெத்துவேட்டு வைகோவும், நெடுமாறனும், தா பாண்டியனும், வரதராஜனும், ராமதாசும் இன்னும் சொல்லவில்லையாதலால்,
ராஜபக்செவிடமிருந்து ப. சிதம்பரம் மூலம் அறிந்து சொல்ல,ஆட்சிக்காக இனப் படுகொலையை கண்டு கொள்ளாத,  முன்னாள் தமிழின தலைவர் கருணாநிதியும் தவறியதால்,
மே 18 , 2008 -க்கு பிறகு அதை பற்றிபேசாத "ஈழத்தாய் ஜெயலலிதா!". 
இப்படியெல்லாம் தமிழ் உணர்வு, ஈழத்தமிழனுக்கு ஆதரவு என வோட்டு வாங்க தமிழகத்து தமிழனை, ஈழத்தமிழனை  ஆதரித்த கன்னடத்து "வைரம்"புகழ்-பைங்கிளி, முன்னாள் நடிகை ஜெயலலிதாவை,

தமிழ் இன தலைவன் பிரபாகரனின் முன்னாள் தம்பிகள் வைகோவும், சினிமாக்காரன் சீமானும்,
வரும் தேர்தலில் ஆதரித்து, அவர்களின் சின்னத்திற்கு வோட்டு கேட்டு, அவரை வெற்றி பெறச் செய்ய போகிறார்களாம்!
இன்றைய இந்த முன்னாள் தம்பிகள் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களின்  கேள்வி: கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொன்னீர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா?
பதில்: இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரசுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி. 
 
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது கடைசிக்கட்டத்தில்தான் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்தார் ஜெயலலிதா. அதேசமயம், லோக்சபா தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே ஈழத்தைப் பற்றிப் பேசுவது கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவருக்காக சீமான் ஆதரவு கோரி பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது..,

ஒருவேளை இவர்கள் பிரசாரத்தால்,
இவர்களின் விடிவெள்ளி தலைவி, "ஈழத்தாய் ஜெயலலிதா!". தமிழகத்தில் வெற்றி பெற்றால்?? இலங்கையில் எப்படி தமிழ் ஈழம் அமையும்??
 "ஈழத்தாய் ஜெயலலிதா!". அதற்கு  ஆதரவளிப்பாரா?
இல்லை " என் ஆட்சியில் ஈழம், தமிழ் உணர்வு என பேசக் கூடாது"-என  பழைய குருடி கதவை திறடி என "ஈழத்தாய் ஜெயலலிதா!". ஆணவத்தோடு அபூர்வ சகோதரர்கள் உங்களை தூக்கி மீண்டும் பொடாவிலோ, தடாவிலோ போட்டால், ஜெயில் கலி தின்ன வைத்தால், உங்கள் பேச்சை கேட்டு வாக்களிக்கும் மூடத் தமிழகத்  தமிழர்களின் கதி?   பின் ஈழத்தமிழர்களின் கதி?
அடுத்த தேர்தலில் நீங்கள் புதிதாய் முளைக்கும் ஒருவரிடம் இதே போல காசு வாங்கிக் கொண்டு, (இலங்கை- புலம் பெயர் தமிழரிடமிருந்து வரும் காசு நின்று விட்டதால்), அவருக்கு வோட்டு போட சொல்லி, அப்போது ஜெயலலிதாவை வசை பாடுவீர்கள்?  உங்கள் வாழ்க்கை வளமானது தான் மிச்சம்! பின்னால் திரளும் மூடர்களின் நிலையோ ஐயோ! சொச்சம்!
--
வெற்றி பெறும் வரையே கூட்டணி?
வோட்டு வாங்கும் வரையே ஈழம், தமிழின ஆதரவு?
தேர்தல் வரையே ஈழம், தமிழின ஆதரவு?
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்ய துணிந்தவர் ஜெயலலிதா என்பது டிசம்பரில் கர்த்தருக்கு கேக் வெட்டி கிருத்துமஸ் கொண்டாடினார்!
நேற்று அய்யா வைகுண்டருக்கு மரியாதை செலுத்தினார்?
தேர்தல் ஆண்டில் மட்டுமே ரமலான் நோன்பு திறப்பார்??? கதை சொல்லுவார்?
தேவர் ஜெயந்திக்கு போவார்?
மீதி நேரங்களில் ...???
பின் யாரையும் மதிக்காதவர், மதிக்க தெரியாதவர் இந்த ஜெயலலிதா என்பது இன்னுமா பிரபாகரனின் இந்த முன்னாள் தம்பிகளுக்கு தெரியவில்லை?
2001 -தேர்தல் வெற்றிக்கு பின் நடந்ததை இவர்களின் முன்னாள் கூட்டாளி ராமதாசை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வாரே?
1991 -இல் ராஜீவ் காந்தி மரணம் என்னும் கோர அரசியல் விபத்தால் முதல்வரான ஜெயலலிதா பின் வாழப்பாடி ராமமூர்த்தியையும், மூப்பனாரையும் மதித்த வரலாறு மறந்ததா?
1998 -இல் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு, அரசியல் மறு வாழ்வு கொடுத்த இதே வைகோ, அண்ணன் பிரபாகரனையும், விடுதலைபுலிகளையும் ஆதரித்து பேசியதாக "பொடா" மூலம் 18 மாதம் ஜெயில் கலி தின்றதும்,  இப்போது மறந்துவிட்டதா?  
பெரியவர் நெடுமாறன் "பொடாவில்'' சிறை சென்றதும் மறந்துவிட்டதா? இல்லை., அவருக்கு வயதாகி விட்டதால் அவர் இடத்தை நிரப்ப வந்து விட்டானா இந்த சினிமாக்காரன் சீமான்??
இவற்றையெல்லாம் கண்டிக்க, தட்டிக் கேட்க அண்ணன் பிரபாகரன் இல்லை என்கிற தைரியமா?
 
மானம் கெட்ட மடையர்களே!!!  
சோற்றில் உப்பை போட்டு தின்கிறீர்களா? வேறு ஏதாவது..,?

 ஆட்சிக்காக இனப் படுகொலையை கண்டு கொள்ளாத
 கருணாநிதி, MGR தொடங்கி..,
முப்பது ஆண்டுகளாய் ஈழத் தமிழர்களுக்காக,  தமிழ் இனப்போருக்கு ஆதரவு என்ற பேரில் ஏற்கெனவே நிறைய பேர் அரசியல் வியாதியாகி!!!,
எங்களை முட்டாளாக்கியது போதும்!

முதலில் தமிழகத்தை முன்னேற்ற வழி சொல்லுங்கடா??? முண்டங்களே?? மூலிகளே?

தமிழ் இனம் இனம் என்று பேசிப்பேசியே உணர்ச்சி வசப்படுத்தி,
காரியத்தை கெடுத்து, எங்கள் வாழ்வையும் கெடுத்து,

உங்கள் அரசியல் வாழ்க்கை தான் வளமானது.

ஈழத்தமிழனின்  வாழ்வும் உயிரும் வீணானது தான் மிச்சம்!

உங்கள் அரசியல் வாழ்க்கையே தமிழ் இனம் போட்ட பிச்சை!

படுத்தாதீர்கள் தமிழ் இனப் போரை கொச்சை!

தீர்ந்ததா உங்கள் பதவி இச்சை??

பத்திரம் உங்கள் கச்சை! (வாங்கிய பணம்)!

தாங்குமா ஈழம்!
வைகோ, நெடுமாறன், திருமா வரிசையில்...... எங்களை முட்டாளாக்கியது போதும்!
போராளி என்ற போர்வையில்..,அரசியல் வியாதி -சீமானும்!

தாங்குமா ஈழம்!

மீளுமா மிச்சம் உள்ள என் தமிழ் இனம்!
 
போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை அந்த முத்துக் குமாரின் ஆவி உன்னை சும்மா விடாது..??

போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, ஜெயலலிதாவின் கைக்கூலியை அந்த தமிழினத்தலைவன் பிரபாகரனின் ஆவி சும்மா விடாது..??


போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை,
"போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன  ஜெயலலிதாவின் கைக்கூலியை அந்த மாண்ட ஈழத்தமிழர்களின் ஆவி சும்மா விடாது..??

நன்றி: http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_10.html

Wednesday, January 5, 2011

நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்து- கவிஞர் அறிவுமதி கேள்வி

மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும், தமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது-

"என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்"ஞ் என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடுஞ்
30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்குஞ்
இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்டோ‌மோ‌
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த
அம்புஞ்
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.
கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
இந்த மன்மத அம்புவின்
வாயிலாகஞ்
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.
"தமிழ் சாகுமாம்ஞ்
தமிழ் தெருப் பொறுக்குமாம்.
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்துஞ்
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்றுஞ்
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் போலஞ்
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..
இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூடஞ் நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!
ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!
இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!
ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்ஞ்
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!
பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்ஞ்
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.
ஆனால்
"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்."
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!
தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..
"யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்
உங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்ஞ்!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்ஞ்
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.
கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறுஞ் வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!
அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து
"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!
அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.
அதற்கு
வருவான்
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.
நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!
நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?
அன்புடன்
அறி‌வு‌மதி

நன்றி: தமிழ் சினிமா

Sunday, January 2, 2011

தமிழனும் வந்தேறிகளும்

                            நம் தமிழ்நாட்டில் இப்போது வந்தேறிகளின் தொல்லை அதிகமாகி கொண்டேயுள்ளது. அவர்களின் தாய் நாட்டிற்கும் போகமுடியாது ஏன்னெனில் அங்கு அவர்களை மதிக்க மாட்டார்கள் மதிக்க  ஆட்களும் இல்லை. இதனால் அவர்கள் நம் தாய்  தமிழ்நாட்டில் தங்கி திரவிடம் மற்றும் இந்தியம் என்று பேசி நம்மை ஏமாற்றி கொண்டு உள்ளார்கள்.


                       இப்போது அவர்ளின் கவலை என்னவென்றால் தமிழ்நாட்டில்  நாம் அனைவரும்  தமிழர் என்ற உனர்வு ஏற்பட்டு கொண்டு உள்ளது. மேலும் ஒரு தமிழன்தான் நம்மை ஆள வேண்டும் என்ற என்னமும் அதிகரித்துயுள்ளது. இதனால் அவர்களின் அதிகாரம் மற்றும்  முக்கியதுவத்தை இழக்க வேண்டி வரும் என்ற கவலை.


             அதனால் அவர்கள் திட்டம்மிட்டு மிக சாதுரியமாக செயல்புரிகின்றார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி தற்போது அறிவித்து உள்ள பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்ம மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பின் வயிலாக தங்கள் இருப்பை பலபடுத்த முனைகின்றார்கள்.


         மேலும் தற்போது பதிவு உலகில் பல வந்தேறிகள் 'இந்தியம், தேசியம்' என்று  கூச்சல்யிடுகிறார்கள். இவர்களின் உன்மையான என்னம் தமிழன் விழிப்புனர்ச்சி அடைந்துவிட கூடாது என்பதேயாகும். அப்படி அடைந்து விட்டால் இவர்களால் இங்கு பிழைக்க முடியாதே.


      தமிழக மீனவர்களை   இலங்கை படையினரிடம் இருந்து ஏன்  பாதுகாக்கவில்லை  என்று கேட்டால் .நாம் இந்தியாவிடம்  சனநாயக முறைபடி கேட்க வேண்டுமாம். அப்படியும் பல முறை கேட்டு போரட்டம் நடத்தியாகிவிட்டது அப்படியும் இந்த இந்தியா அரசு எந்த முயற்ச்சியையும் எடுக்கவில்லை. தன் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை அதை கூட செய்யாத இந்த திரவிட மற்றும் இந்தியா அரசு எதற்கு எங்களுக்கு.


    ஈழ தமிழனை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்டால் அவர்கள் ராசீவ்காந்தியை கொன்றார்களாம் அதனால் அவர்கள் பயங்கரவாதிகளாம்.
யார் சொன்னது விடுதலை புலிகள் கொன்றது என்று காங்கிரசு கட்சியில் இருக்கும் சில பிழைப்புவாதிகளும் மற்றும் சில பிழைப்புவாத அதிகாரிகள் மட்டுமே கூறினார்கள். மற்றவர்கள் யாரும் உறுதியாக கூறவில்லை சோனிய உட்பட.
மேலும் தகவல்களுக்கு :http://rajivgandhi-assassination.blogspot.com/


    இந்தியாவும், காங்கிரசும் ஈழ தமிழனுக்கு உதவியது என்று கூறுகின்றர்கள். ஏன் உதவியது ஈழ தமிழன் உதவி கேட்டு வேறு நட்டிற்கு போய் விட கூடாது என்றும், அவன் இந்தியாவின் பிடியில் இந்தியாவின் அடிமையாக இருக்க வேண்டும் என்ற என்னத்தில் மட்டும்தான் வேறு எந்த நல்ல என்னமும் இல்லை. இதுவே புலிவால் பிடித்த கதையாகி விட்டது ஈழ மக்களுக்கு இந்தியாவை  தொடரவும் முடியாவில்லை,விடவும் முடியாவில்லை. இதுவே  இப்போது இந்த நிலையில்  கொண்டு  வந்து நிறுத்தியுள்ளது .


   இதுவே வேறு ஒரு நாட்டின் ஆதரவு கிடைத்திருந்தால் ஈழ மக்கள் இந்த துன்பம் அடைந்திருக்க மாட்டர்கள்.


           "ஒரு தமிழன் எங்கு இருந்தாலும் அவன் தமிழன்தான்


    ஒரு வந்தேறி இங்கு இருந்தல் அவன் வந்தேரிதான் "


ஆகவே  தமிழர்களே இவர்களின் கொட்டத்தை அடக்க உரக்க  சொல்லுவோம்   "நாங்கள் தமிழர்கள்" என்று .               
                           

Wednesday, December 29, 2010

2010 – ராஜபக்ச சந்தித்த தலைக்குனிவு

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் கூட பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை தன் நாட்டு மக்கள் மீது வீசி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த இனப் படுகொலை அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த ஆண்டில் பல முனைகளில் தலைகுனிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

2009ஆம் ஆண்டு மே 16,17,18ஆம் தேதிகளில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து போரை முடித்த மகிந்த ராஜபக்சவுக்கு, உலகத்தை அதிர்ச்சியுறச் செய்த இந்த படுகொலையை தடையின்றி நடத்தி முடிக்க தனக்கு உதவிய தெற்காசிய வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கி ஆதரவளித்த இரஷ்யாவும் அளிக்கும் ஆதரவு மட்டும் தன்னையும், தனது நாட்டையும் காத்திட போதுமானது அல்ல என்று உணரவைத்த ஆண்டு இது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை இழப்பு

“உங்கள் நாட்டு மக்கள் மீது தொடுத்த யுத்தத்தில் நடந்த போர்க் குற்றங்களை முறையாக விசாரிக்க பன்னாட்டு விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, தங்களுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில், 6 மாத காலத்தில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி மீது விதிக்கப்படும் தீர்வைக்கு தாங்கள் அளித்துவரும் மானியத்தை நிறுத்துவோம் என்று அறிவித்தது. ஏனெனில், எந்த ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கும் இப்படிப்பட்ட இறக்குமதி தீர்வைச் சலுகை அளிப்பதற்கு ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியமானது, அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே.

சிங்கள பேரினவாதம் என்பதைத் தவிர ஜனநாயகம் என்ற ஒன்றை மருந்திற்கும் அறியாத சிறிலங்க அரசியல்வாதிகளுக்கு, மனித உரிமை என்பது சிங்கள மக்கள் உரிமை என்பதைத் தவிர வேறு என்ன தெரியும்? எனவே எதிர்பார்த்தைப் போல் ஐரோப்பிய ஒன்றிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்று ராஜபக்ச மறுக்க, அந்நாட்டின் ஏற்றுமதிக்கு, குறிப்பாக ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு அளித்துவந்த தீர்வை மானியத்தை இரத்து செய்வதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்தது.

இந்த முடிவை மேற்கொள்வதற்கு முன்னர், அது தொடர்பாக தன்னளவில் ஒரு பெரும் விசாரணையை நடத்தியது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தக பேச்சாளர் கிரிஸ்டியன் ஹோமான் இவ்வாறு கூறினார்; “இலங்கையில் நிலவும் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக புலனாய்வு செய்தோம். குறிப்பாக, ஜி.எஸ்.பி.+ வரிச் சலுகையை பெறுவதற்கு அடிப்படையான பன்னாட்டு மனித உரிமை தரங்களை மதிப்பது என்று அளித்த உறுதிமொழியை சிறிலங்க அரசு பாதுகாக்கிறதா என்று பார்த்தோம். சிறிலங்க அரசு இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதையே விசாரணை அறிக்கை காட்டுகிறது” என்று தெளிவாக விளக்கிய பிறகே இறுதி அறிவிப்பை வெளியிட்டது.

இலங்கைக்கு ஆண்டிற்கு சராசரியாக 3.47 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அந்நியச் செலாவணியை கொண்டு வருவது ஆயத்த ஆடை ஏற்றுமதியே. இதற்கு அடுத்த இடத்தில் 1.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு தேயிலை ஏற்றுமதி இருக்கிறது. இவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் தீர்வை மானியம் மட்டும் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல்! இதனை இழந்துள்ளதால் ஏற்றுமதியை இழந்துள்ளது இலங்கை.

இன்றைக்கு அந்நாட்டின் வர்த்தகப் பேரவையின் தலைவர், ஏற்றுமதியை அதிகரிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த நிலை நீடித்தால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியபோது, எங்களுடைய நடவடிக்கையின் மீது வினா எழுப்ப இவர்கள் யார் என்று திமிராக கேட்ட சிறிலங்க அரசியல்வாதிகள், இப்போது ‘எங்களுக்கு பதில் அளிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற வாசலில் குனிந்து கொண்டு கோரிக்கை விடுக்கிறார்கள்!

தமிழக மக்கள் முறியடித்த ஐஃபா விழா

உலகமே போர்க் குற்றவாளி என்று விரல் நீட்டி குற்றஞ்சாட்டிவந்த நிலையிலும் வாரியணைத்து வாழ்த்திட அருகே இந்தியா இருக்க கவலை ஏன்? என்று இருமாந்திருந்த அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது நாட்டை அமைதிப் பூமியாக காட்டவும், அதன் மூலம் கிழந்து தொங்கிக் கிடக்கும் தனது நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சுற்றுலாவைப் பெருக்கவும் திட்டமிட்டு, மும்பையின் திரை நட்சத்திரங்களை வைத்து ஒரு பெரும் விழாவை நடத்தி உலகத்தின் பார்வை திசை திருப்ப முயன்றார். அதுவே இந்தியா சர்வதேச திரைப்பட விழா (India International Film Festival - IIFA) ஐஃபா.

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் அமிதாப் பச்சனை ஐஃபா விழாவின் தூதராக வைத்து அவர் ஆட முற்பட்ட பன்னாட்டு ஏமாற்று நாடகத்தை உரிய நேரத்தில் உணர்ந்த தமிழ் உணர்வாளர்கள், அதற்கு எதிரான ஒரு பெரும் பிரச்சார திட்டத்தை உருவாக்கி, சென்னையிலும், மும்பையிலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்த அமிதாப்பும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் ஐஃபா விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகத்தினரும் புறக்கணித்தனர். ஐஃபா விழாவில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் தென்னாட்டில் திரையிட அனுமதிக்க முடியாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவிக்க, சில இந்தி நடிகர், நடிகைகளின் துணையுடன் நடந்த ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது.
அது மட்டுமல்ல, அந்த விழாவை ஒட்டி, இந்தியாவின் தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் முழு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட உலக வர்த்தக மாநாடும் தோல்வியில் முடிந்தது. இது சிறிலங்க அரசிற்கு அவமானத்தையும், பெரும் நிதியிழப்பையும் ஏற்படுத்தியது மட்டமின்றி, தமிழ்நாட்டின் எதிர்ப்பு எத்தனை வலிமையானது என்பதை சிறிலங்க அரசுத் தலைமைக்கு உணர்த்தியது.

ஐ.நா.அவையில் கேட்பதற்கு யாருமில்ல

ஆனாலும் தனது பெருமையை இந்திய, சீன எல்லையைத் தாண்டி நிலைநாட்டுவதில் முனைப்பாக இருந்த மகிந்த ராஜபக்ச, ஐ.நா.அவையில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மிகுந்த பிரயாசையுடன் நியூ யார்க்கிற்குப் புறப்பட்டார். அன்றைய தினம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசிய பிறகு ராஜபக்ச பேச வேண்டும். ஒபாமா பேசியபோது உலக நாடுகளின் தூதர்கள் அனைவரும் அவையில் இருந்து கவனத்துடன் கேட்டனர். அவர் பேசி முடித்துவிட்டு வெளியேறியதும், அடுத்துப் பேச ராஜபக்ச மேடையேறியபோது, அவையே காலியாக இருந்தது. அப்போதுதான் ராஜபக்சாவிற்கு தனது ‘பெருமை’ சர்வதேச அளவில் எந்த அளவிற்கு கொடி கட்டிப் பறக்கிறது என்பது.

அதன் பிறகு உலகத் தலைவர்கள் பலரை தான் அளித்த விருந்திற்கு அழைப்பு விடுத்தார். வந்தவர் ஒரே ஒருவர்தான், அவர் ஈரான் அதிபர் அஹமதிநேஜாத். அவரும் 20 நிமிடம் இருந்துவிட்டு வெளியேறினார். இவரை எந்த ஊடகமும் திரும்பிப் பார்க்கவில்லை, அவ்வளவு புகழ்!

உலகப் புகழ் பெற்ற லண்டன் விஜயம்!

உலக நாடுகளில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு வரவேற்பை சந்தித்திருக்க மாட்டார்கள். விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் சென்று, வேறு எங்கும் தலை காட்ட முடியாமல், தனது நாட்டுத் தூதரகத்தில் பாதுகாப்பாக அடைக்கலம் புகுந்து, பிறகு பங்கேற்க வந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பெருமை மகிந்த ராஜபக்சவிற்கு மட்டுமே கிடைத்தது.

‘எங்கள் இனத்தை அழித்தொழித்த இனப் படுகொலையாளனை ஆக்ஸ்போர்டில் பேச அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறி, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள், லண்டனில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் மட்டுமின்றி, உலக நாடுகளிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை உலகம் மேலும் ஆழமாக உணர வைத்தது.

பெண்கள், குழ்ந்தைகள், பெரியவர்கள் என்று அந்தக் குளிரில் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டியவர்களெல்லாம் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டம், ராஜபக்சவை தலை குனிய வைத்தது.

தெற்காசிய வல்லரசுகள் தனக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த ஆதரவு போதும், அவைகளைத் தாண்டி எந்த வல்லரசும் அல்லது ஐ.நா.வும் தன்னை நெருங்கிவிட முடியாது என்ற நினைத்திருந்த மகிந்த ராஜபக்சவை, இந்த ஓராண்டில் தமிழர்கள் துரத்தி, துரத்தி தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரியது அவர்களின் விடுதலை போராட்டத்தில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தங்கள் நியாயமான போராட்டத்தை அழிக்க முற்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது, உலக நாட்டு அரசுகளின் துணையுடன் அதனை பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்த மகிந்த ராஜபக்ச அரசிற்கும், அதற்கு துணை நின்ற இந்திய, சீன வல்லாதிக்கங்களுக்கும், நிராயுதபாணியாக தமிழ் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ளவும் முடியவில்லை, பதில் கூறவும் இயலவில்லை!

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களையும், அரசுகளையும் விட வலிமையானது என்பது இந்த ஆண்டில் நிரூபணமானது.


நன்றி: தமிழ் வெப்துனியா